Wednesday 30 March 2011

கைக்கடிகாரத்துடன் இணைந்த கையடக்கத் தொலைபேசி

தொழிநுட்பமானது அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. கையடக்கத் தொலைபேசித் தொழிநுட்பமானது இதில் குறிப்பிடத்தக்கது.

அந்ந வகையில் எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசிகள் எவ்வாறு இருக்கலாம் என்பதனை அலெக்ஸி சக்கனிகொவ் என்பவர் தனது கற்பனைத்திறன் மூலம் வித்தியாசமாக உருவாக்கிக் காட்டியுள்ளார்.

கைக்கடிகாரத்துடன் இணைந்ததாகவும் நவீன வசதிகள் அனைத்தையும் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Friday 18 March 2011

மாப்பிள்ளை


New Tamil Mp3
Aaru Padai
Ennoda Rasi
Love Love
Mappillai Theme
Onnu Rendu
Ready Readya
Ready Readya (Re-mix)


Banner: Sun Pictures

Cast: Danush & Hansika Motwani

Direction: Suraaj

Production: Kalanidhi Maran

Music: Mani Sharma

Lyricis: Viveka, P.a Vijay & Snehan

Tuesday 15 March 2011

மொடல் அழகியின் மார்பகத்தை கடித்த பாம்பு விஷமேறி உயிரிழப்பு

 
மொடல் அழகியொருவரின், சத்திரசிகிச்சை மூலம் பெரிதாக்கப்பட்ட மார்பகத்தை எதிர்பாராவிதமாக கடித்த பாம்பொன்று நச்சுத் தன்மையால்  உயிரிழந்துள்ளது.

இஸ்ரேலிய மொடல் அழகியான ஒரிட் பொக்ஸ் என்பவர் ஸ்பெனிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டபோது,  பாம்மை கையில் பிடித்து அதனது முகத்தை முத்தமிடுவதற்கு முயன்றுள்ளார்.

ஆனால், அந்த பாம்பானது ஆத்திரமடைந்து மொடல் அழகி பொக்ஸின் பெரிய மார்பை கவ்விக்கொண்டது.

ஓரிட் பொக்ஸ் அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துக் செல்லப்பட்டார். ஆனால் அவர் நீண்ட கால விபத்தை எதிர்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரை கடித்த பாம்பு உயிரிழந்துள்ளது. ஓரிட் பொக்ஸின் மார்பகங்களை  பெரிதாக்குவதற்காக சத்திரசிகிச்சை மூலம் உள்ளே வைக்கப்பட்டிருந்த சிலிக்கனை பாம்பு கடித்ததால் பாம்பின் உடலில் விசமேறியதே இதற்குக் காரணமாம்..

இஸ்ரேலில் பொக்ஸ் மிகப்பெரிய நட்சத்திரமாக விளங்குகிறார். அவர் தனது மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்ள பல தடவை சத்திரசிகிச்சை செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Monday 14 March 2011

உங்கள் Yahoo கணக்கை ஜிமெயிலில்(Gmail) தொடர

(படித்ததில் பிடித்தது)
நீங்கள் Yahoo மற்றும் Gmail கணக்கு வைத்திருந்து இனிமேல் Gmail லிலேயே தொடரலாம் என்ற முடிவிற்கு வந்தால், உங்கள் Yahoo கணக்கிலுள்ள தொடர்புகள் மற்றும் மின்னஞ்சல்களை ஜிமெயில் கணக்கின் மூலம் பயன்படுத்தலாம்.
இதற்கு முதலில் உங்கள் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் கொடுத்து ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள்.
ஜிமெயில் திரையில் வலது மேல் மூலையிலுள்ள Settings லிங்கை கிளிக் செய்யுங்கள். அதில் Accounts and Import என்ற டேபை கிளிக் செய்து, Import mail and contacts பட்டனை அழுத்துங்கள்.
இனி வரும் திரையில் உங்கள் Yahoo மெயில் கணக்கை கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.
தொடரும் அடுத்த திரையில் உங்கள் யாஹூ கணக்கின் கடவுச் சொல்லை கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்த திரையில் இம்போர்ட் செய்ய வேண்டியவற்றை தேர்வு செய்யவும். ஒருமுறை சரி பார்த்த பின்னர் Start Import பட்டனை கிளிக் செய்யவும். அடுத்த இறுதி திரையில் OK பட்டனை கிளிக் செய்யவும்.
அவ்வளவு தான் நாம் இம்போர்ட் செய்யும் மெயில்களின் அளவைப் பொறுத்து இம்போர்ட் செய்யும் நேரம் மாறுபடும்.

உங்களது முக்கியமான கோப்புகளை மற்றவர்களிடமிருந்து மறைக்க

நாம் சில முக்கியமான கோப்புகளை வைத்து இருப்போம். அதாவது நம்முடை pen Drive ஐ ஒருவரிடம் கொடுக்கும் போது அதில் நாம் நிறைய தகவல்களை சேமித்து வைத்து இருப்போம்.
எடுத்துக்காட்டாக Word Document, Excel Worksheet, PowerPoint Presentation, Pdf, mp3, video, softwares, games போன்றவைகள் இருக்கலாம். இப்படியான சில முக்கியமான கோப்புகள் யாரிடமும் சென்று விடக் கூடாது என்று சில நேரங்களில் நாம் நினைக்கலாம். அடுத்தவர் உங்கள் கோப்புகளை திருடாமல் இருக்க இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்.
இதற்கு எல்லாம் மென்பொருளா? சாதாரணமாக ஒரு Hidden செய்தால் போதும் தானே அல்லது அந்த நேரத்தில் குறிப்பிட்ட கோப்பை அழித்து விட்டு அல்லது cut செய்து வைத்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். இது நமக்கு சிரமத்தைத் தான் ஏற்படுத்தும்.

1. இந்த மென்பொருளை கணணியில் பதிய வேண்டிய அவசியம் இல்லை.
2. இதற்குறிய password முற்றிலும் வித்தியாசமானது. அதாவது இங்கு password ஆக பயன்படுவது Text Document ஆகும். என்ன புரிய வில்லையா? உங்களுடைய folder ஐ திறக்க வேண்டும் என்றால் Right click செய்து New > New Text Document இந்த கோப்பை உருவாக்கினால் தான் உங்களுடைய folder open ஆகும்.
இதற்கு முதலில் download செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான இடத்தில் இதனை நிறுவிக் கொள்ளுங்கள்.
Folder Personal என்பதனை open செய்யவும். ஏதாவது ஒரு கீயை அழுத்தவும். இப்போது Personal என்ற ஒரு Folder உருவாகி இருக்கும். அதில் முக்கியமான கோப்புகளை காப்பி செய்து விட்டு folder ஐ மூடி விடுங்கள்.
மீண்டும் Folder Personal என்பதனை open செய்து ஏதாவது ஒரு கீயை அழுத்தவும் அந்த Folder Lock ஆகிவிடும்.
Unlock செய்வதற்கு குறிப்பிட்ட இடத்தில் அதாவது Folder Personal.exe இருக்கும் இடத்தில் New Text Document இந்த பைல் இருந்தால் மாத்திரமே Unlock செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளை பயன்படுத்தி ஐந்து முறை மாத்திரமே unlock செய்து கொள்ள முடியும். அடுத்த முறை unlock செய்யும் போது Register பண்ண வேண்டும் என்ற செய்தி தோன்றும் என்பதனை மறந்து விடாதீர்கள்.
 தரவிறக்க சுட்டி

Wednesday 9 March 2011

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஷார்ட்கர்ட் கீகள்

கணணியை அடிக்கடி பயன்படுத்துபவரா நீங்கள்? நீங்கள் கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.
இவற்றை மனப்பாடம் செய்ய வேண்டாம். அடிக்கடி பயன்படுத்துங்கள். பின் உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இவற்றை நீங்கள் சரியாகச் சொல்வீர்கள்.
  1. CTRL+C (Copy) : தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் காப்பி செய்திட. காப்பி செய்ததை அடுத்து எந்த இடத்திலும் எந்த பைலிலும் ஒட்டிக் கொள்ளலாம்.
  2. CTRL+X (Cut) : தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் நீக்கிட. நீக்கப்பட்டவை கிளிப் போர்டு மெமரியில் இருக்கும் அதனை பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
  3. CTRL+V (Paste) : ஏற்கனவே தேர்ந்தெடுத்ததை, கட் செய்ததை பேஸ்ட் செய்திட. இதற்குப் பதிலாக இன்ஸெர்ட் கீயையும் பயன்படுத்தலாம்.
  4. CTRL+Z (Undo) : சற்று முன் மேற்கொண்ட செயலை மாற்றி பழைய நிலைக்குக் கொண்டு வர.
  5. DELETE (Delete) : எதனையும் அழித்துவிட. இதனை மீண்டும் கொண்டு வர ரீசைக்கிள் பின்னில் தேட வேண்டும். தேடிப் பெறாமல் பேஸ்ட் செய்திட முடியாது.
  6. SHIFT+DELETE : நிரந்தரமாக அழித்துவிட. இந்த கட்டளை மூலம் அழிக்கையில் அது ரீ சைக்கிள் பின்னுக்குப் போகாது.
  7. F2 Key : பைல் ஒன்றின் பெயரை மாற்றிப் புதிய பெயரிட.
  8. CTRL+RIGHT ARROW : ஒவ்வொரு சொல்லாக கர்சரைக் கொண்டு செல்ல.
  9. CTRL+UP ARROW : முந்தைய பாராவின் முதல் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல.
  10. CTRL : இந்த கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால் அதில் அடைபடும் டெக்ஸ்ட் அல்லது படம் செலக்ட் செய்யப்படும்.
  11. CTRL+DOWN ARROW: அடுத்த பாராவில் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல.
  12. SHIFT : இந்த கீயை அழுத்தியவாறே ஆரோ கீகளை அழுத்தினால் தொடர்ந்து கூடுதலாக வரிகளோ, எழுத்தோ பாராவோ செலக்ட் ஆகும்.
  13. ஒரு சிடி அல்லது டிவிடியை அதன் ட்ரேயில் செலுத்திய பின் அதில் உள்ள ஆட்டோமெடிக் ஸ்டார்ட் அதனை இயக்கும். அந்த இயக்கத்தை நிறுத்த வேண்டுமாயின் இந்த கீயை சிடியை ட்ரேயில் வைத்து தள்ளிவிட்டபின் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
  14. CTRL+A : அனைத்தும் செலக்ட் செய்திட.
  15. F3 Key : பைல் அல்லது போல்டரைத் தேட.
  16. ALT+ENTER : தேர்ந்தெடுக்கப்பட்ட பைலின் புராபர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும். இதில் பைல் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
  17. ALT+F4 : அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமை மூடலாம்.
  18. ALT+SPACEBAR : எந்த விண்டோ இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதற்கான ஷார்ட் கட் திறக்கப்படும்.
  19. CTRL+F4 : ஒரே நேரத்தில் பல டாகுமெண்ட்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் நீங்கள் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைலை மூடுவதற்கு உதவும்.
  20. ALT+TAB : திறந்திருக்கும் புரோகிராம்களில் ஒவ்வொன்றாகச் செல்ல உதவும். எந்த புரோகிராம் தேவையோ அதில் கர்சரை நிறுத்தி என்டர் செய்தால் அந்த புரோகிராம் திறக்கப்படும்.
  21. ALT+ESC : டாஸ்க் பாரில் திறக்கப் பட்டுள்ள புரோகிராம் டேப்களில் ஒவ்வொன்றாகச் செல்லும். தேவையான புரோகிராம் தேர்ந்தெடுக்கப்படுகையில் கிளிக் அல்லது என்டர் செய்தால் அந்த புரோகிராமில் உள்ள பைல் ஸ்கிரீனில் காட்டப்படும்.
  22. CTRL+ESC : ஸ்டார்ட் மெனு திறக்க.
  23. F10 Key : ஒரு மெனுபாரினை இந்த கீ இயக்கத் தொடங்கும்.
  24. ESC : அப்போதைய செயல்பாட்டினைக் கேன்சல் செய்திடும்.

Monday 7 March 2011

ஒரே கிளிக்கில் நீங்கள் விரும்பும் இணைய பக்கத்தை வரவழைக்க

நாம் ஒரு இணைய பக்கத்தை திறக்க வேண்டுமெனில் முதலில் பிரவுசரை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து அதில் உள்ள முகவரியில் நமது இணையதள முகவரி தட்டச்சு செய்து என்டர் செய்ய வேண்டும்.
இதை விட எளிமையாக இணையத்தை திறக்க என்ன வழி என இப்போது பார்க்கலாமா? டாக்ஸ்பாரில் காலியாக உள்ள இடத்தில் மவுஸை கொண்டு ரைட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Lock the Taskbar எதிரில் டிக் அடையாளம் இருந்தால் அதை எடுத்து விடவும்.
அடுத்து Toolbars என்கின்ற இடத்திற்கு கர்சரை கொண்டு செல்லவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ கிடைக்கும். அதில் Address என்கின்ற இடத்தில் கிளிக் செய்யவும். இப்போது டாக்ஸ்பாரில் உங்களுக்கு Address என்கின்ற பெயர் கிடைக்கும்.
அதை மவுஸால் பிடித்து இழுத்தால் முகவரி பட்டை வெளியில் வரும். அதில் உங்களுக்கு தேவைப்படும் முகவரியை தட்டச்சு செய்து என்டர் தட்டினால் உங்கள் தளமுகவரிக்கு நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்.
நீங்கள் விரும்பி உபயோகிக்கும் தளமுகவரியினை இதில் பூர்த்தி செய்து வைத்துக் கொள்ளலாம். இனி நீங்கள் பிரவுசரை கிளிக் செய்தாலே போதும் உங்களுடைய இணையதளம் ஓபனாகி விடும்.( படித்ததில் பிடித்தது)

கூகுளின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு

கடந்த சில வாரங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Office மென்பொருளிற்கும், Google Docs க்கும் இடையில் கூகுள் ஒரு பாலத்தினை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வசதியானது அனைத்து கூகிள் பாவனையாளர்களும் உபயோகப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது. இந்த Google cloud connect னை கணணியில் நிறுவிக் கொள்வதன் மூலம் கூகுள் கணக்கில் காணப்படும் ஆவணங்களினை மைக்ரோசாப்ட் office மென்பொருளினைப் பயன்படுத்தி தொகுக்கலாம்.
மேலும் நாம் ஆவணங்களை தொகுக்கும் போது அவற்றை நேரடியாக எமது கூகுள் டொக்ஸ் கணக்கில் சேமிக்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்த சேவையானது தற்போதைக்கு விண்டோஸ் இயங்கு தளத்திற்கு மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.
அவ்வாறு நிறுவிய பின்னர் Microsoft office இல் ஏதாவது ஒரு மென்பொருளினை திறந்து Sign in என்பதை க்ளிக் செய்து கூகிள் கணக்கினை லொகின் செய்வதன் மூலம் நமது ஆவணங்களினை கூகுள் டொக்ஸில் சேமித்துக் கொள்ள முடியும்.
இந்த புதிய சேவையினை பயன்படுத்தி உங்கள் ஆவணங்களினை இணையத்தில் சேமித்து வைப்பதன் மூலம் எங்கும் எப்போதும் ஆவணங்களினை பயன்படுத்தும் வசதியினை பெற்றுக் கொள்ளுங்கள்.( படித்ததில் பிடித்தது)
தரவிறக்க சுட்டி

தேவையற்ற புரோகிராம்களை நீக்க

நமது கணணியில் அவசியமில்லாமல் இயங்கும் புரோகிராம்கள், இணையத்தில் இருந்து வரும் கோப்புகள் போன்றவை தேவையில்லாமல் நமது கணணியில் இருக்கின்றன.
மேலும் கேம்ஸ் விளையாடி முடித்த பின் கணணியில் தேங்கும் கோப்புகள், போட்டோ மற்றும் வீடியோ கோப்புகளைக் கொண்டு படங்களை அமைக்கையில் இரட்டிப்பாகும் பாடல் மற்றும் படக்காட்சி கோப்புகள் எனப் பல வகையானவைகள் தேவையில்லாமல் நமது கணணியில் இடம் பிடிக்கின்றன.
இடம் பிடிப்பது மட்டுமின்றி கணணியின் இயக்கத்தையும் இவை மந்தமாக்குகின்றன.
இவற்றை எப்படித் தான் நீக்குவது? எவை எவை நீக்கப்பட வேண்டியவை என்று கண்டறிவது? இதற்கான வழிகளை மிக எளிமையாகவும் எளிதாகவும் தருகிறது ஒட்டோமிக் கிளீனர் என்னும் புரோகிராம்.( படித்ததில் பிடித்தது)
தரவிறக்க சுட்டி

Friday 4 March 2011

Hidden Camera

Tuesday 1 March 2011

இமேஜ்களை பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய

வேர்ட் பைல் பார்மெட்டிலிருந்து பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றம் செய்ய வழிகள் குறைவு.

நம்முடைய சான்றிதழ்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து இமேஜ் பைல் பார்மெட்களில் வைத்திருப்போம். JPG, GIF, BMP, TIF, PNG, TGA, PBM, மற்றும் PSD போன்ற பைல் பார்மெட்களில் மட்டுமே ஸ்கேன் செய்த ஆவணங்களை வைத்திருப்போம்.
 
இது போல நம்மிடம் பல்வேறு விதமான டாக்குமெண்ட்கள் இமேஜ் பார்மெட்டில் இருக்கும். இவை அனைத்தையும் ஒரே பைலாக மாற்ற வேண்டுமெனில் நாம் வேர்ட் மற்றும் பிடிஎப் பைலாக மாற்ற வேண்டும். வேர்ட் பைலாக மாற்றினால் அதை நம்முடைய அனுமதி இல்லாமல் யார் வேண்டுமானலும் எடிட் செய்ய முடியும்.
அவ்வாறு இல்லாமல் பிடிஎப் பைல் பார்மெட்டாக இருப்பின் அந்த பைல்களை யாராலும் எடிட் செய்ய முடியாது. அவ்வாறு இமேஜ்களை பிடிஎப் பைல்களாக உருவாக்க மென்பொருள் ஒன்று இலவசமாக கிடைக்கிறது.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து 4867JWVI3C3F5D9 இந்த கீயினை உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளவும். இந்த மென்பொருளின் சந்தை விலை $29.95 ஆகும். இந்த மென்பொருளை 2011 மார்ச் 22 வரை மட்டுமே இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
JPG to PDF Converter மென்பொருளை ஒப்பன் செய்யவும். பின் Add என்ற பொத்தானை அழுத்தி இமேஜ் பைல்களை தேர்வு செய்து கொள்ளவும். அதன் பின் எந்த இடத்தில் பிடிஎப் பைலை சேமிக்க வேண்டுமோ, அந்த இடத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
 
Compress Quality என்பதில் அளவினை தேர்வு செய்து கொள்ளவும். பின் Convert To PDF Now என்ற பொத்தானை அழுத்தி பிடிஎப் பைலாக சேமித்து கொள்ளவும். இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய JPG to PDF Converter சிறந்த மென்பொருள் ஆகும். (படித்ததில் பிடித்தது)
தரவிறக்க சுட்டி
Enhanced by Zemanta

ஆயுளைக் கூட்ட எளிய வழிகள்

ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம்.
அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு முக்கிய வழிகளை பின்பற்ற வேண்டும் என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.

 



அதற்கு தேவையான உடற்பயிற்சி



 




அதிக அளவில் மது அருந்தாமை


அன்றாட உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை மிகுதியாகச் சேர்த்துக் கொள்வது. 


  
  புகைப்பழக்கம் இல்லாமை
ஆகிய நான்கினையும் பின்பற்றினால் நமது ஆயுட்காலத்தில் 14 ஆண்டுகளைக் கூட்டலாம் என்கிறது இந்த மருத்துவ ஆய்வு.

இதனை இங்கிலாந்தின் கேம்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆகியவை இணைந்து மேற்கொண்டனர். 45 வயது முதல் 79 வயது வரையிலான 20 ஆயிரம் பேர்களைக் கொண்டு இந்த ஆய்வு 1993 ல் இருந்து 2006 வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
சமூகத்தில் பலதரப்பட்ட மக்களையும் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த மருத்துவ ஆய்வில் நம்பகத்தன்மை மிகுந்து காணப்படுவதாக மருத்துவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.(படித்ததில் பிடித்தது)

 
Enhanced by Zemanta