Sunday 12 September 2010

கொழுக்கட்டை - கார வகை

தேவையான பொருட்கள் :


1. அரிசி மாவு ஒரு ஆழாக்கு
2. உளுத்தம்பருப்பு 200 கிராம்
3. காய்ந்த மிளகாய் 10 அல்லது 12
4. பெருங்காயம் சுண்டைக்காய் அளவு
5. உப்பு 1 1/2 ஸ்பூன்
6. கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு
7. கடுகு 1 ஸ்பூன்
8. சமையல் எண்ணெய் 50 கிராம்


செய்முறை :

1. இனிப்புக் கொழுக்கட்டைக்குச் செய்தது போன்றே மாவு தயார் செய்து கொள்ள வேண்டும்.

2. உளுத்தம்பருப்பு ஒரு ஆழாக்கு, காய்ந்த மிளகாய் 10, உப்பு, கொஞ்சம் பெருங்காயம். உளுந்தை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவிட வேண்டும்.

3. ஊறிய உளுத்தம் பருப்புடன், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்றே கரகரப்பாக அரைக்க வேண்டும்.

4. அரைத்த விழுதைக் குக்கரில் வைத்து வெயிட் போட்டு 5 நிமிடம் வேக வைவிட வேண்டும்.

5. வெந்த மாவு ஆறியவுடன் உதிர்த்துக்கொண்டு வாணலியில் சற்று தாராளமாக எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்த விழுதைப் போட்டுக் கிளற வேண்டும்.

6. இப்போது காரக் கொழுக்கட்டைக்கு பூரணம் தயார். இந்த பூரணம் ஆறியவுடன் ருசிக்காக ஒரு மூடி எலுமிச்சம்பழம் பிழியலாம்.

7. இனிப்புக் கொழுக்கட்டை போலவே அரிசி மாவை எடுத்து கிண்ணம் செய்து காரப் பூரணத்தை வைத்து மூடி குக்கரில் இட்லி தட்டில் வேக வைக்க வேண்டும்.