- இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ?
- தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது
- கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
- கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம்
- அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது
- அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது
- அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்
- ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது
- இலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம்
- ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம்
- அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை
- அதிகாரி குசுவிட்டால் அமிர்த வஸ்து தலையாரி குசுவிட்டால் தலையை வெட்டு
- அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்தி தான்
- அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்
- படப்போட திங்குற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டா காணுமா ?
- அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்
- ஆக்கங்கெட்ட அக்கா மஞ்சள் அரைத்தாலும் கரிகரியாக வரும்
- ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு
- அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்
- அவிசாரி ஆனாலும் முகராசி வேணும் , அங்காடி போனாலும் கைராசி வேணும்
- புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம் அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்
- பத்துவயதில் பெண் தேவகன்னியாக இருப்பால் பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள் நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள்பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும் அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம்
- ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்
- பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்
- நாக்கு தான் பெண்ணிற்கு வாள்,அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை
- ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்
- மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு
- உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்
- முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது
- சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது
- சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
- எழுத்துச் சிரங்கு ஒருவனுக்குப்பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாது
- அவன் பேனாவால் சொறிந்து கொண்டேயிருப்பான்
- உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது
- சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு
- அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு
- மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும்
- நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்
- எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது
- கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்
- இரத்தத்தில் கையை நனைப்பவன் , கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும்
- உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்
- எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்
- ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்
- நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்
- ஜன்னல்கள் வழிகாட்டும்
- ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்
- அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும்
- எஜமானனை கீழே தள்ளாமல் விடாது
- அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்
- காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்
- ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை
- செவிடன் இருமுறை சிரிப்பான்
- ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்
- பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்
- ஒரு பெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான்
- பொண்டாட்டியை அடிப்பவன் அவளுக்கு மூன்று நாட்கள் ஓய்வுகொடுத்துத்
- தானும் மூன்று நாள் பட்டினியாயிருப்பான்
- குழந்தை “ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்
- அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்
- பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்
- குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.
- அவசரக்காதல் சீக்கிரம் சூடாகி சீக்கிரம் குளிர்ந்து விடும்
- ஒருத்திமீது காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும்
- அதிர்ஷ்டக் குறிகளாகத் தெரியும்
- தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை,
- காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை
- கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்
- மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம்
- செல்லத் துள்ளி ஓடுகிறான்
- வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி
- தோண்டிக்கொள்கிறான்
- இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது
- உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை
- ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்
- மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் ..
- உறங்குகின்ற ஓநாயின் வாயில் ஆடுகள் சென்று விழுவதில்லை
- நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை
- மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்
- பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்
- மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்
- மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும் வாயாடிகள்
- தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது
- பழமொழியில் உமி கிடையாது
- கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்
- மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்
- சேற்றிலுள்ள புள்ளும் , வேட்டைநாயின் பல்லும் , மூடனுடைய சொல்லும் அதிகமாய்க் குத்தும்
- உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழிவெட்டுவது போன்றதாகும்
- ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்
- ஒரு பையிலுள்ள அரிவாள் , பூட்சுக்குள் இருக்கும் துரும்பு, சாளரத்தின்
- அடியிலுள்ள பெண் – இவைகள் தாம் இருப்பதை அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டே இருக்கும்
- மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்
- தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை
- குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை
- ஆந்தையும் தன் மகனை ராஜாளி என்றே கொஞ்சும்
- ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை
- மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்
- ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை
- திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும் ஒரு விலாங்கும் இருக்கும்
- கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம் பற்றிய நினைப்பை உண்டாக்குவார்
- பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள் ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்
- காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்
- பெண்ணின் யோசனையால் பலனில்லை என்றாலும்அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்
- கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள் வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா
- சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன் சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?
- உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடையார் பா¨ளாயத்துல போயி உடும்பு பிடிப்பானா ?
- உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்
- சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுது கொண்டே தொங்கும்
- பழைய இஞ்சியில் காரம் அதிகம்
- உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்
- பொண்டாட்டி என்றால் புடவை துணிமணிகள் என்று அர்த்தம்
- மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் , கணவனுக்கு அமைதி கிடைக்கும்
- சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம்
- விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்
- தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்
- போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம்
- தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது
- அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்.
- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
- அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
- அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
- அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்
- அறுக்கத் தெரியாதவனுக்கு ஆயிரம் கதிர் அறுவாள்
- அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்
- ஆட்டுக்கு வால் அளந்து வைத்திருக்கு
- ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
- ஆடத்தெரியாத தேவடியாளுக்கு கூடம் போறாதாம்
- ஆற்றுல போட்டாலும் அளந்து போடு
- ஆழமறியாமல் காலை விடாதே.
- ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன் (மருவி ஆயிரம் பேரைக் கொண்டவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றது)
- இடுக்கண் வருங்கால் நகுக
- உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
- உலை வாயை மூடினாலும் ஊர்வாயை மூடேலாது.
- ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
- எடுத்தேன் கவிழ்த்தேன்
- எலி எண்ணைக்கு அழறது எலிப்புழுக்கை எதற்கு அழறது?
- எள் என்றால் எண்ணையாய் நிற்பான்
- ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
- ஓய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்
- கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
- கண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அணைக்கும்.
- கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது
- கழனி பானையில் கைவிட்டமாதிரி
- கனியை விட்டு காயைத் தின்பாளா?
- காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
- சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது
- கிடக்கிறபடி கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை
- குடிக்கிறது கூழ் கொப்புளிகிறது பன்னீர்
- குரு குசு விட்டால் குற்றமில்லை
- குரைக்கிற நாய் கடிக்காது
- குமர் தனியப் போனாலும் கொட்டாவி தனியப் போகாது.
- கீரை மசிச்ச சட்டியிலே ரஸம் வச்சமாதிரி
- கெடுவான் கேடு நினைப்பான்
- தனிமரம் தோப்பாகுமா?
- தான் திருடன் பிறறை நம்பான்.
- துப்பு கெட்டவளுக்கு இரட்டை பரிசாம்
- துள்ளற மாடு பொதி சுமக்காது
- தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை
- பசி எடுத்தவனுக்கு ருசி தெரியாது
- பசி வந்திடப் பத்தும் பறந்திடும்
- பழகப் பழக பாலும் புளிக்கும்
- பாம்பு தின்னும் ஊரில் நடு கண்டம் நமக்கு
- பன்றியின் முன்னே முத்துக்களைப் போடாதே
- தம்பி உடையன் படைக்கு அஞ்சான்
- புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
- பெத்த வயத்திலே பிரண்டையைக் கட்டிக்கொள்
- பேச்சைக்கொடுத்து ஏச்சை வாங்குவானேன்?
- விதைக்கிற காலத்தில தூங்கிவிட்டு அறுவடையை நினைக்கலாமா?
- வெட்டிண்டுவா என்றால் கட்டிண்டு வருவான்
- வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல
- நூலைப் போல சேலை தாயைப் போல பிள்ளை
- முருங்கைன்னா ஒடிச்சு வளர்க்கணும் பிள்ளைன்னா அடிச்சு வளர்க்கணும்
- யானைக்கும் அடி சறுக்கும்
- அடியாத மாடு பணியது
Monday, 11 October 2010
தமிழ் பழமொழி
11:15
palamoli