Monday 7 March 2011

ஒரே கிளிக்கில் நீங்கள் விரும்பும் இணைய பக்கத்தை வரவழைக்க

நாம் ஒரு இணைய பக்கத்தை திறக்க வேண்டுமெனில் முதலில் பிரவுசரை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து அதில் உள்ள முகவரியில் நமது இணையதள முகவரி தட்டச்சு செய்து என்டர் செய்ய வேண்டும்.
இதை விட எளிமையாக இணையத்தை திறக்க என்ன வழி என இப்போது பார்க்கலாமா? டாக்ஸ்பாரில் காலியாக உள்ள இடத்தில் மவுஸை கொண்டு ரைட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Lock the Taskbar எதிரில் டிக் அடையாளம் இருந்தால் அதை எடுத்து விடவும்.
அடுத்து Toolbars என்கின்ற இடத்திற்கு கர்சரை கொண்டு செல்லவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ கிடைக்கும். அதில் Address என்கின்ற இடத்தில் கிளிக் செய்யவும். இப்போது டாக்ஸ்பாரில் உங்களுக்கு Address என்கின்ற பெயர் கிடைக்கும்.
அதை மவுஸால் பிடித்து இழுத்தால் முகவரி பட்டை வெளியில் வரும். அதில் உங்களுக்கு தேவைப்படும் முகவரியை தட்டச்சு செய்து என்டர் தட்டினால் உங்கள் தளமுகவரிக்கு நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்.
நீங்கள் விரும்பி உபயோகிக்கும் தளமுகவரியினை இதில் பூர்த்தி செய்து வைத்துக் கொள்ளலாம். இனி நீங்கள் பிரவுசரை கிளிக் செய்தாலே போதும் உங்களுடைய இணையதளம் ஓபனாகி விடும்.( படித்ததில் பிடித்தது)