Friday, 3 December 2010

சுக்கு காப்பி



    * சுக்கு - ஒரு துண்டு
    * மிளகு - ஒரு தேக்கரண்டி
    * இலவங்கம் - 3
    * பனைவெல்லம் - ஒரு கட்டி (சுவைக்கேற்ப)
    * துளசி இலை - ஒரு கைப்பிடி
    * காபிப்பொடி - ஒரு தேக்கரண்டி
    * தண்ணீர் - 2 கப்


  1. மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். சுக்கை தட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. மிக்ஸியில் சுக்கு, மிளகு, லவங்கம் இவற்றை போட்டு கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
  3. பின்னர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து கொதிக்க வைக்கவும். கொதித்ததும் காபிப்பொடி, அரைத்தபொடி இரண்டையும் போடவும்.
  4. அதன் பிறகு பனைவெல்லத்தை உடைத்து அதில் போடவும்.
  5. பிறகு துளசி இலைகளை போடவும்.
  6. நன்கு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி வைக்கவும்.
  7. சுவையான சுக்கு காபி ரெடி.