
41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள்
என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும்
துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.
42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும்,
பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர்
துணையாக இருத்தல் வேண்டும்.
43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா...