Thursday 25 November 2010

பழமொழி

  • நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்
  • தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே! மனிதன் முன்பாக வெட்கப்படு!அப்பொழுதே உனக்கு விமோசம் ஆரம்பம்
  • யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்
  • எட்டப்பனின் வாரிசு இன்னும் உயிரோடு கடன்காரனிடம் காட்டிக்கொடுக்கிறதே வாசலில் கிடக்கும் செருப்பு.
  • மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!
  • அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன!
  •  பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
  • கணவன் குடித்தால் பாதி வீடு எரியும். மனைவி குடித்தால் முழு வீடும் எரிந்து கொண்டிருக்கும்.
  • நாக்கு கொடிய மிருகம். ஒருமுறை அவிழ்த்து விட்டால் கட்டுவது கடினம்
  • ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல@ விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!
  • நன்றாகப் பேசுவது நல்லதுதான் - ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!
  • சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது!
  • முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி மௌனமாக இருப்பதுதான!
  • பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்! பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்!
  • தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!
  • படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
  • மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
  • உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
  • வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
  • பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.
  • ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
  • எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
  • மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
  • கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
  • அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.