Friday, 31 December 2010

Mangayar Ulagam

Mangayar Ulagam

New Year SPL TOP 10 Comedy 2010

Wednesday, 22 December 2010

Funniest Clips

Battle at Kruger

Tuesday, 21 December 2010

Leoni - Siripom Sindhipom

Monday, 20 December 2010

Mangayar Ulagam

Special Interview With Seeman

Leoni - Siripom Sindhipom

Leoni - Siripom Sindhipom

Sunday, 19 December 2010

Leopard Cub Vs King Cobra

Wednesday, 15 December 2010

Mynaa Songs

Mangayar Ulagam

Sunday, 12 December 2010

Sangeethagalin Sangamam

Suvaiyo Suvai 12-12-2010

Latest Tamil Movie Video Songs Collection

Saturday, 11 December 2010

Alavandaan

Sachien

Roja

Duet



Watch Duet - Tamil Movie directed by K. Balachander, Music by A.R. Rahman starring Prabhu, Meenakshi Seshadri, Ramesh Arvind, Sarath Babu, Charlie, Senthil, Prakash Raj, Mohan Ram & Damu.

Azhagan



Mammootty, Bhanupriya, Geetha & Madhubala

Baashha

Gunaa

Friday, 10 December 2010

காஞ்சிவரம்


பழமொழி

  1. பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
  2. பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
  3. பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
  4. பக்கச் சொல் பதினாயிரம்.
  5. பசியுள்ளவன் ருசி அறியான்.
  6. பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
  7. பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
  8. பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
  9. பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
  10. படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
  11. படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
  12. படையிருந்தால் அரணில்லை.
  13. படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
  14. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
  15. பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
  16. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
  17. பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
  18. பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
  19. பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
  20. பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
  21. பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.

Wednesday, 8 December 2010

god - ganapathy song

Rajnikanth - Vadivelu in Muthu

Leoni - Siripom Sindhipom

Vadivel Comedy

Mangayar Ulagam

Tamil hit songs

Tuesday, 7 December 2010

Mangayar Ulagam

Suvaiyo Suvai - Samaiyal

Mangayar Ulagam

Saturday, 4 December 2010

சிவபுராணம்


முன்னுரை :
தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.

சிவபுராணம் என்று பெயர் கொண்ட இப்பதிகம் சீவ புராணமல்லவா பேசுகின்றது ? ஏன் சிவபுராணம் எனப் பெயர் பெற்றது ? மாணிக்க வாசகப் பெருமான் பரம்பொருளாகிய சிவபெருமானைப் பலவாறெல்லாம் விளித்து அவர் பூவார் திருவடிகளுக்குத் தம்முடைய உளமார்ந்த வணக்கங்களைக் கூறித் துவங்குகிறார். சீவனான உயிர் மும்மலச் சேற்றில் அகப்பட்டுத் திகைத்து நிற்கும் காலமும், அச்சீவனுக்கு சிவபெருமான் திருவருளால் ஏற்படும் மேம்பாடுகளையும் கூறி இறுதியாக அச்சிவபெருமானின் திருவடிக்குச் செல்லும் பெருநிலையை நமக்குக் காட்டுகின்றார். சீவன் மலச்சுழியில் சிக்குண்டு இருக்கும் தாழ்நிலையிலிருந்து, சிவனார் பெருங்கருணையால் சிவகதி அடையும் தன்னிகரற்ற பெருநிலை பற்றிக் கூறுவதால் இது சிவபுராணமே.

திருவாசகம் பெரிதும் எளிய நடையைக் கொண்டதாக இருப்பது காரணமாக உரையின் துணையின்றியே அன்பர்கள் படித்துப் பயன்பெறுவது. எனினும் சந்தி பிரித்து தினமும் பேசும் மொழியில் வழக்கத்தில் இப்போது இல்லாத சில சொற்களுக்குப் பொருளும், அங்கங்கே தொடர்புடைய சில கருத்துக்கள் குறிப்பதுவும் அன்பர்களுக்கு பயன்படக்கூடும் என்ற கருத்துடன் இவ்வுரை வரையப்பட்டுள்ளது. நேயத்தே நின்ற நிமலனார் பிழைகளை மன்னித்தும் தவிர்த்தும் அருள அவர்தம் செம்மலரடிகளுக்குப் போற்றுதல்கள். 

பதிகமும் உரையும்.

 

திருச்சிற்றம்பலம் 

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

(பொருள்)


வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

(பொருள்)


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

(பொருள்)


சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

(பொருள்)


கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

(பொருள்)


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

(பொருள்)


எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

(பொருள்)


வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

(பொருள்)


ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

(பொருள்)


கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

(பொருள்)


மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

(பொருள்)


விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

(பொருள்)


தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

(பொருள்)


பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

(பொருள்)


அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

(பொருள்)


நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

(பொருள்)


மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

(பொருள்)


போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

(பொருள்)


அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

(பொருள்)

திருக்குறள்-பிறனில் விழையாமை

151. பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்.

பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை,

உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும்

ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.


152. அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்.

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள்

அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை

 மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.


153. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்.

நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம்

தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன்,

உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.


154. எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச்

சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது,

 எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.


155. எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

எளிதாக அடையலாம் என எண்ணிப்

பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக

நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.


156. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க

 நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி

ஆகிய நான்கும் நீங்குவதில்லை.


157. அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்.

பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை

நாடிச் செல்லாதவனே அறவழியில்

இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.


158. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு.

வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன்

நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று

அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.


159. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்.

பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே

 கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை

அடைவதற்குத் தகுதியுடையவர்.


160. அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது

அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.

திருக்குறள்-ஒழுக்கம் உடைமை

141. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால்,

அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.


142. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில்

ஒழுக்கமே சிறந்த துணை என்பதால்,

எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.


143. ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான்

 உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும்.

ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள்

இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.


144. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால்

மீண்டும் படித்துக் கொள்ள முடியும் ஆனால்,

பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து

அவன் தவறினால் இழிமகனே ஆவான்.


145. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும்

அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.


146. ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால்

ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம்

குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.


147. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி.

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்

 இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.


148. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக

அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.


149. ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச்

 சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.


150. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்.

உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம்

எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள்

பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்

Friday, 3 December 2010

மாசு மருவற்ற முகம் வேண்டுமா?


ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை அவன் முகத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அதனால் தான் நம் முன்னோர்கள் முகத்தை கண்ணாடியாக கூறினார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் விளக்கம் இதுதான்.மாசு மருவற்ற முகம் பெற சில குறிப்புகள்:

பால் பவுடர் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
இவைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு முகத்தை நன்றாக கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து பின் கலந்து வைத்துள்ள கலவையை முகத்தில் பூசி 10 அல்லது 15 நிமிடங்கள் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரு வாரங்கள் செய்துவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் மாறி முகம்பொலிவு பெறும்.
வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாக பிசைந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.
நகை அணிந்து கருத்துப்போய் உள்ள கழுத்துப்பகுதிகளிலும் தடவினால் கருப்பு நிறம் மாறும்.
மஞ்சள் தூள் - 10 கிராம் எடுத்து, அதனுடன் ஆரஞ்சு சாறு 100 மில்லி கலந்து முகம் மற்றும் சூரிய ஒளி படும் பகுதிகளில் பூசி, 20 நிமிடங்களுக்கு ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் மற்றும், வெயிலால் கருத்துப்போன பகுதிகள் நிறம் மாறும்.
கேரட் சாறு - 50 மி.லி., அன்னாசிப்பழச் சாறு - 50 மி.லி. எடுத்து ஒன்றாகக் கலந்து கருத்தப் பகுதிகள் மேல் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு 1 வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கருமை மாறி முகம் பளிச்சிடும்.
ஒரு கப் தயிருடன் வெள்ளரிச்சாறு கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளக்கும்.
சந்தனத்தூள் - 10 கிராம், எடுத்து அதில் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் குளிப்பதற்கு முன் உடலில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சருமம் பளபளப்பாகும்.
வறண்ட முகம் பளபளக்க:
கறிவேப்பிலையையும், மருதாணி இலைகளையும் தனித்தனியே நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, 
கறிவேப்பிலை பொடி 1/2 டீஸ்பூன், மருதாணி பொடி 1/2 டீஸ்பூன் எடுத்து நீர்விட்டு குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட முகம் பொலிவு பெறும்.
தேன் - 1 டீஸ்பூன், தக்காளிச்சாறு - 1 டீஸ்பூன் எடுத்து கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூச கருமை நிறம் மாறி முகம் பளபளக்கும்.

கூந்தலின் வளர்ச்சிக்கு

கண்ட கண்ட ஆயில், ஷாம்பூ வேணாம்
கலரிங் பெயரில் கெடுக்கவும் வேணாம்
தலைமுடியை சீராக வைப்பது எப்படி என்று பட்டமே கொடுக்கும் அளவுக்கு பல விஷயங்கள் வந்துவிட்டன.
ஏகப்பட்ட ஆயில்கள், ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் என்று ஏகப்பட்ட வெளிநாட்டு இறக்குமதி சமாசாரங்கள் வந்துவிட்டன. போதாக்குறைக்கு வாண்டூ முதல் வயதான பெரியவர்கள் வரை, தங்களை இன்னும் அழகுபடுத்திக்காட்ட வேண்டும் என்று, கலரிங் செய்யும் கொடுமையும் நடந்து வருகிறது.

தண்ணீரை மாற்றினால்!
வெளியூர் போனால், குடிநீர் குடிக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உள்ளூர் தண்ணீரை குடித்துவிட்டு, வெளியூர் தண்ணீர் குடித்தால், ஒத்துக்கொள்ளாது என்பது சிலருக்கு தெரியாது. குடித்த பின்னர் தொல்லை வரும் போதே உணர்வர். சிலர் ஊர் ஊருக்கு மாறுதல் கிடைக்கும் போது, அவர்கள் குளிக்க பயன்படுத்து தண்ணீர் தன்மையும் மாறுகிறது. இதனால், பாதிக்கப்படுவது அவர்களின் தலைமுடி தான்.
கவலைப்பட்டாலும்...
மேற்கண்ட இரண்டைக் காட்டிலும், முக்கியமானது கவலை தான். ஒருவரின் கவலை தான், அவரின் தலைமுடி கொட்டவும் காரணம். குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். ஆறு மணி நேரமாவது தூங்கினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தலைமுடி ஆரோக்கியத்துக்கும் இது தேவை. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு கவலை தானாக வரும். அப்படியிருக்கும் போது, முடிகொட்டத் தான் செய்யும்.
இதுக்கு என்ன செய்யணும்?
தலைமுடி, இந்த இரண்டு வகையில் எந்த "டைப்" என்று தெரிந்து கொண்டால் தான் நாம் அதற்குரிய ஷாம்பூவை தேர்ந்தெடுக்க முடியும். ஆயில் முடியுள்ளவர்கள், அந்த ஆயிலை நீக்கி சீராக்கும் வகையில் உள்ள "டீப் கிளீன்சிங்" ஷாம்பூவை பயன்படுத்த வேண்டும். வறண்ட தலைமுடி உள்ளவர்கள், கண்டிஷனர் தரம் அதிகம் உள்ளதும், எஸ்.எல்.இ.எஸ்., என்று அழைக்கப்படும் ரசாயனம் கலந்த ஷாம்பூவை பயன்படுத்தினால் நல்லது.
வழுக்கை விழுதே...
ஆண்களில் முடிகொட்டி வழுக்கை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. வானிலை, தண்ணீர், கவலை ஆகிய மூன்று முக்கிய காரணங்கள் தான் பலரின் வழுக்கைக்கு பின்னால் உள்ளவை. கோடை வெயில் பிளந்தாலும், அதிக பனி பெய்தாலும் சிலருக்கு "முடி"வில்லா பிரச்னையாக தான் உள்ளது. கோடையில் வியர்த்து எண்ணெய் முடியாகிவிடுவதும், பனிக்காலத்தில், முடிகள் வறண்டுபோவதும் இவர்களுக்கு நேர்வதுண்டு.
முடிவெட்ட நாலணா
நாலணா கொடுத்து தலைமுடியை கத்தரித்துக்கொள்ளும் காலம் போய்விட்டது; சிகையலங்கார கூடத்தில் போய் முடிவெட்டும் போக்கு, இளைஞர்களிடம் அதிகரித்துவிட்டது. பியூட்டி பார்லர் போகாத பள்ளிச்சிறுமிகள் இல்லை. அந்த அளவுக்கு அழகாக்கிக்கொள்வதில் பலரும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டனர்.
மாதம் பல ஆயிரம் வரை செலவழிப்பவர்களும் உண்டு. அதனால், சந்தையில் கண்ட கண்ட ஆயில்கள், ஷாம்பூக்கள் குவிந்து வருகின்றன. தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாதவர்கள், இந்த தரம் குறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் வரும் ஆபத்து குறித்து யாரும் கவலைப்படுவதில்லை.
புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் முடி, ஆயில் முடியா, வறண்ட முடியா என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்? இதோ எளிய வழி. ஒரு "பிளாட்டிங்" பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். தலைமுடியில் மிதமாக அழுத்தி, ஒரு நிமிடம் வரை வைத்திருங்கள். இப்போது எடுத்துப்பாருங்கள்; பேப்பரில் பிசுபிசுப்புடன் ஆயில் தன்மை இருந்தால், உங்கள் முடியில் ஆயில் தன்மை அதிகம் இருக்கிறது என்று பொருள். அப்படியில்லாமல், பேப்பரில், தலைமுடியின் காய்ந்த பகுதியின் துகள்கள் இருக்குமானால், உங்கள் தலைமுடி, வறண்ட தன்மை கொண்டது.
நீண்ட கூந்தலா?
நீங்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் பணியாற்றுகிறீர்கள் என்றால், உங்களால், தலைமுடியை பராமரிக்க போதுமான நேரம் இருக்காது. அதனால், தோளில் பரவும் வகையில் தலைமுடியை குறைத்துக்கொள்ளலாம். முடியை எப்போதும் "ட்ரிம்" செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வறண்டுபோய் விடும். கூந்தலுக்கு ஏற்ற ஷாம்பூ, கண்டிஷனரை பயன்படுத்த தெரிய வேண்டும்.
கலரிங் கொடுமை
ஆண், பெண்களில் கலரிங் என்ற பெயரில் பெரும் கொடுமை நடக்கிறது. தரம் குறைவான பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்தவே கூடாது. ஆரம்பத்தில், முடியை பார்க்க பேஷனாகத்தான் இருக்கும். போகப்போக, கேவலமாக போய்விடும்.
எந்த சத்து தேவை?
முடிக்கு எந்த சத்துக்கள் தேவை தெரியுமா? ஒன்று; இரும்புச்சத்து. மற்றது; புரோட்டீன். இந்த இரண்டும் மிக முக்கியமானவை. இவற்றில் குறைபாடு இருந்தால், தலைமுடி கொட்டும்; ஆண்களுக்கு வழுக்கை ஏற்படும். சிலர் குண்டாக இருந்தாலும், ரத்தசோகை இருக்கும். அதுபோல, சிலருக்கு புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும். இவர்களுக்கு முடிகொட்டுவதை வைத்தே இதை தெரிந்து கொள்ளலாம். அதுபோல, ரத்தத்தில் "பெர்ரட்டின்" அளவை வைத்தே, ரத்த சோகை அளவை கண்டுபிடிக்கலாம்.

சுக்கு காப்பி



    * சுக்கு - ஒரு துண்டு
    * மிளகு - ஒரு தேக்கரண்டி
    * இலவங்கம் - 3
    * பனைவெல்லம் - ஒரு கட்டி (சுவைக்கேற்ப)
    * துளசி இலை - ஒரு கைப்பிடி
    * காபிப்பொடி - ஒரு தேக்கரண்டி
    * தண்ணீர் - 2 கப்


  1. மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். சுக்கை தட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. மிக்ஸியில் சுக்கு, மிளகு, லவங்கம் இவற்றை போட்டு கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
  3. பின்னர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து கொதிக்க வைக்கவும். கொதித்ததும் காபிப்பொடி, அரைத்தபொடி இரண்டையும் போடவும்.
  4. அதன் பிறகு பனைவெல்லத்தை உடைத்து அதில் போடவும்.
  5. பிறகு துளசி இலைகளை போடவும்.
  6. நன்கு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி வைக்கவும்.
  7. சுவையான சுக்கு காபி ரெடி.

Tuesday, 30 November 2010

ilayaraja hit songs



Kannadasan Hit songs

Sunday, 28 November 2010

திருக்குறள்-அடக்கம் உடைமை

131. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும்.

அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.


132. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது

அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக்

கூடியது வேறொன்றும் இல்லை.


133. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்.

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து

அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின்

பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.


134. நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற

அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு,

மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.


135. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும்.

ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு,

மேலும் ஒரு செல்வமாகும்.


136.ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும்

ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி,

காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.


137.யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும்

நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.

இல்லையேல் அவர் சொன்ன சொல்லே

அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.


138. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல்,

பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக

இருந்து துன்பம் விளைவிக்குமானாலும்,

அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.


139. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும் ஆனால்

வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள்

விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.


140. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும்

பண்பு கொண்டவரை அடைந்திட

அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.

திருக்குறள்-நடுவு நிலைமை

121. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.

பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து

ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே

நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.


122. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து.

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை

அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.


123. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன்

நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும்,

அந்தப் பயனைக் கைவிட்டு

நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.


124. தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி,

நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி

நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ

அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.


125. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை

அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக

இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.


126. கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம்

என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து

விடுமானால் அவன் கெட்டொழியப்

போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.


127 கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

நடுவுநிலைமை தவறாமல் அறவழியில்

வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச்

செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால்

அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.


128. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி.

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான

தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான்

உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.


129. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால்

அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும்.

அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.


130. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன்

பொருளைப் போலவே கருதி நேர்மையுடன்

வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.

திருக்குறள்-செய்ந்நன்றியறிதல்

111. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

``வாராது வந்த மாமணி'' என்பதுபோல், ``

செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க

அரிய உதவி வழங்கப்பட்டால்,

அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈ.டாக மாட்டா.


112. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும்

உதவி சிறிதளவாக இருந்தாலும்,

அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.


113. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே,

அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.


114. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட

அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில்

பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.


115. உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச்

சிறப்படைவதில்லை அந்த உதவியைப்

பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.


116. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது

துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.


117. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு

என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல,

ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின்

தூய்மையான நட்பை நினைத்துப்

போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.


118. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல

அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும்

அக்கணமே மறந்து விடுவது நல்லது.


119. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்.

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட

நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட

வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச்

செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.


120. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு

ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

திருக்குறள்-இனியவை கூறல்

91. இன்சொலால் ஈ.ரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,

வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின்

அதுவே இன்சொல் எனப்படும்.


92. அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து

ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.


93. முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக்

கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.


94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `

நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை.


95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர,

ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.


96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய

வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி

நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.


97. நயன்ஈ.ன்று நன்றி பயக்கும் பயன்ஈ.ன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல

பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக்

கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும்

உண்டாக்கக் கூடியவைகளாகும்.


98. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன்

வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.


99. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை

உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக்

கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?


100. இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை

விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை

ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

திருக்குறள்-விருந்தோம்பல்

81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று,

அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.


82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச்

சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும்

உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.


83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை,

அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.


84. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்.

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை

வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.


85. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை

உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய

விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?


86. செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி

வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை

ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில்

இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.


87. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து

விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.


88. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது,

விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற்

போயிற்றே என வருந்துவார்கள்.


89. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத

அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக

இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.


90. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது.

அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.

திருக்குறள்-அன்புடைமை

71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்.

உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு

அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின்

துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.


72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்

அன்பு உடையவரோ தம் உடல், பொருள்,

ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.


73. அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு.

உயிரும் உடலும்போல் அன்பும் செயலும்

இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.


74. அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈ.னும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும்

அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.


75. அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு,

அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.


76. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத்

திகழ்கிறது என்பதை அறியாதவர்களே,

அறச் செயல்களுக்கு மட்டுமே

அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.


77. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை,

அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும்.

அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.


78. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை,

பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.


79. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு.

அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப்

புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?


80. அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்

இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.

திருக்குறள்-மக்கட்பேறு

61. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட

இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.


62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக

இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக்

காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.


63. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்.

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம்.

அம்மக்களின் பொருள்கள் அவரவர்

செயல்களின் விளைவாக வரக்கூடியவை.


64. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத்

தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால்

அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச்

சுவையானதாகிவிடுகிறது.


65. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு

இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது

செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.


66. குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக்

கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை

ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.


67. தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய

நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில்

புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.


68. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற்

சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி

உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.


69. ஈ.ன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று

ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது

அடைந்த மகிழ்ச்சியைவிட

அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.


70. மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.

``ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது

இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'',

என்று ஒரு மகன் புகழப்படுவதுதான்,

அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய

கைம்மாறு எனப்படும்.

திருக்குறள்-வாழ்க்கைத் துணைநலம்

51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள்

வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள்,

கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.


52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை

எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும்

அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.


53. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.

நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில்

எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத

வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.


54. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின்

உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால்,

அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?


55. தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை

விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி

பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற

மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.


56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும்

காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும்

புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.


57. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன்

வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.


58. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால்,

பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய

உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.


59. புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள்,

தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து

நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.


60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு

அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.

திருக்குறள்-இல்வாழ்க்கை

41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள்

என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும்

துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.


42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும்,

பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர்

துணையாக இருத்தல் வேண்டும்.


43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை.

வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு

வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல்,

சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத்

தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும்

ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.


44. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல.

பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி

இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த

பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான்

வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.


45. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும்

விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய

நல்ல செயல்களும் தேவை.


46. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்.

அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக்

கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில்

சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.


47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில்

தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின்

இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.


48. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில்

நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள்

கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.


49. அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.


50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள்

கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில்

நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும்

தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.

திருக்குறள்-அறன் வலியுறுத்தல்

31. சிறப்பீனும் செல்வமும் ஈ.னும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய

அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக்

கூடிய வழி வேறென்ன இருக்கிறது?


32. அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும்

அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு

ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை அந்த அறத்தை

மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.


33. ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும்,

அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத

அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.


34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

மனம் தூய்மையாக இருப்பதே அறம் மற்றவை

ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.


35. அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம்,

புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும்

அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.


36. அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள்

கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது

ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.


37. அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை.

அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில்

உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில்

வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும்

எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை

மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை

ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத்

தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும்

அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக்

கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே

பெரும் சுமையாகக் கருதுவார்கள்.


38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல்,

தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு

வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும்

கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.


39. அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி

வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே

இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது

புகழும் ஆகாது இன்பமும் ஆகாது.


40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க

அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே

ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

திருக்குறள்- நீத்தார் பெருமை

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை,

சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.


22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு

என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே

பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.


23. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.

நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை

மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.


24. உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும்

அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு

ஏற்ற விதையாவான்.


25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும்

மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால்

ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ்

கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.


26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர்

என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய

செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர்

என்றும் வரையறுத்துவிட முடியும்.


27. சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை

அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.


28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில்

அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி

நூல்களே எடுத்துக் காட்டும்.


29. குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால்

அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.


30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள்

பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

Crime Dairy Special

Suvaiyo Suvai 28-11-2010

Friday, 26 November 2010

திருக்குறள்-வான்சிறப்பு

11.வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால்

அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.


12.துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.

யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை

பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள்

அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.


13.விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி.

கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால்

பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.


14.ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால்,

உழவுத் தொழில் குன்றி விடும்.


15.கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக்

கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு

வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.


16.விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில்

பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.


17.நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப்

பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித

சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச்

சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.


18சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈ.ண்டு.

வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர்

அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு

விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?


19.தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது,

பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு

மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.


20.நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே

கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின்

இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

Boothak Kannadi 11-11-2010

Boothak Kannadi 25-11-2010

Niyam 16-07-2010

Niyam - 25-11-2010

திருக்குறள்-வழிபாடு

1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை

ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.


2.கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின்

முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான்

ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.


30மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின்

புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.


4.வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப்

பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.


5.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு

புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை

ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.


6.பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும்

கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய

நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு

நிலையானதாக அமையும்.


7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி

நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை

தீர வழியேதுமில்லை.


8.அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால்,

அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி

நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக்

கடப்பது என்பது எளிதான காரியமல்ல.


9.கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும்,

அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான்

ஈ.டற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி

நடக்காதவனின் நிலையும் ஆகும்.


10.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர்,

தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

Thursday, 25 November 2010

பழமொழி

  • நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்
  • தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே! மனிதன் முன்பாக வெட்கப்படு!அப்பொழுதே உனக்கு விமோசம் ஆரம்பம்
  • யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்
  • எட்டப்பனின் வாரிசு இன்னும் உயிரோடு கடன்காரனிடம் காட்டிக்கொடுக்கிறதே வாசலில் கிடக்கும் செருப்பு.
  • மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!
  • அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன!
  •  பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
  • கணவன் குடித்தால் பாதி வீடு எரியும். மனைவி குடித்தால் முழு வீடும் எரிந்து கொண்டிருக்கும்.
  • நாக்கு கொடிய மிருகம். ஒருமுறை அவிழ்த்து விட்டால் கட்டுவது கடினம்
  • ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல@ விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!
  • நன்றாகப் பேசுவது நல்லதுதான் - ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!
  • சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது!
  • முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி மௌனமாக இருப்பதுதான!
  • பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்! பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்!
  • தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!
  • படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
  • மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
  • உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
  • வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
  • பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.
  • ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
  • எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
  • மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
  • கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
  • அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.



    Wednesday, 24 November 2010

    tamil hit HQ

    Sunday, 21 November 2010

    HIT songs

    SPB hit

    Sad songs hit

    A. R. Rahman hit

    Saturday, 20 November 2010

    Tamil win online TV

    sport live

    online Tv

    HIT songs

    KTV live



    Mangayar Ulagam

    Thursday, 18 November 2010

    Enthiran-Puthiya Manidha

    Wednesday, 17 November 2010

    Comedy Show

    Mangayar Ulagam

    Enthiran-Kilimanjaro

    Enthiran-Kadal Anukkal

    Tuesday, 16 November 2010

    DAN-mavai-senathiraja

    Nadanthathu Enna

    Comedy Show

    Comedy Show

    Suvaiyo Suvai

    Niyam - 16-11-2010

    Leoni - Siripom Sindhipom

    Monday, 15 November 2010

    Cofee with Anu

    Neengalum Samaigalaam

    Aha Enna Rusi

    Mynaa Mynaa

    Niyam - 15-11-2010

    Comedy Show

    Sunday, 14 November 2010

    Special Samaiyal Show

    Vadivel-Comedy

    Suvaiyo Suvai

    Saturday, 13 November 2010

    Enthiran

    Friday, 12 November 2010

    Kadal Meter

    Crime Dairy special

    Nijam - 12-11-2010

    உதடுகள் அழகாக

    முகத்தின் அழகை மேலும் வசீகரப்படுத்துவதில் கண்கள் எவ்வளவு முக்கியம் பெறுகின்றவோ அதைப்போல் உதடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. முறையாக உதடுகளைப் பராமரிக்காமல் விட்டால் உதடு வரண்டு தோல் உரிந்து அது அவலட்சணமாகிவிடும். ஆகவே உதடுகளைப் பராமரிக்க...

    பொதுவான ஆலோசனைகள் :

    வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும். உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அவலட்சணமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

    மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

    இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெயை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும். தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.

    லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

    இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம். லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும். உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வொஷ் அல்லது தேங்காய் எண்ணெயை உபயோகிக்கலாம்.

    லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு விற்றமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும். உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

    முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும். லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் குளொஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் குளொஸ் தடவப்பட வேண்டும். லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

    Leoni - Siripom Sindhipom - Part 3

    Mangayar Ulagam

    Thursday, 11 November 2010

    Tom -Jerry

    Wednesday, 10 November 2010

    Vivek Comedy