தேவையான பொருள்கள் :
- மில்க்மெய்ட் – 3/4 டின்
- பால் – 1/2 லிட்டர்
- பால் க்ரீம் – 1 1/2 கப்
- வெனிலா எசன்ஸ்
- பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும்.
- க்ரீமை லேசாக மிக்ஸியில் அடித்துக் கலந்து கொள்ளவும்.
- க்ரீமுடன் மில்க்மெயிட், பால் மற்றும் சில சொட்டுகள் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும்.
- இறுக்கமான அலுமினியம் டப்பா அல்லது வேறு உறைய வைக்கும் கண்டெய்னரில் கலவையை ஊற்றி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும். கலவை டப்பாவில் முக்கால் அளவு மட்டும் இருக்குமாறு கண்டெயினர் பெரிதாக இருக்கட்டும்.
- பாதி உறைந்ததை எடுத்து மீண்டும் மிக்ஸியில் மிக மிக மென்மையாக ஆகும்வரை அடித்துக் கலக்கவும்.
- மீண்டும் அதே கண்டெயினரில் ஊற்றி ப்ரீசரில் நன்கு உறைய வைத்து (4 மணி நேரம் ஆகலாம்) உபயோகிக்கவும்.
- கன்டென்ஸ்டு மில்க்: ஒரு லிட்டர் பாலை அரை லிட்டருக்கும் கீழாக மில்க்மெய்ட் consistency அளவுக்குக் குறையும்வரை அடுப்பில் வைத்து நிதானமான தீயில் காய்ச்சவும். காய்ச்சும்போது 150 கிராம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். Non-stickல் இதைச் செய்வது சுலபம்.
- மில்க் க்ரீம்: அன்றாடம் பால் காய்ச்சும்போது நிதானமான சூட்டில் அல்லது சிம்மில் வைத்து பாலைக் காய்ச்சி, ஆறவைத்து ப்ரிட்ஜில் வைக்கவும். மேலாக திடமான க்ரீம் சேர்ந்திருக்கும். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொண்டே வரவும். தேவையான அளவு க்ரீம் சேர்ந்ததும் 2 டேபிள்ஸ்பூன் பாலைக் கலந்து மேலே சொன்ன மாதிரி மிக்ஸியில் அடித்துக் கலந்து கொள்ளலாம். அல்லது அமுல் கம்பெனியின் பால் க்ரீம் தரமானதாக இருக்கும். மற்றவையும் உபயோகிக்கலாம்.
- க்ரீமை மிக்ஸியில் மோர் கடையும் பிளேடால் வைப்பர் பட்டன் அல்லது ரிவர்சில் ஒரு சில செகண்டுகள் மட்டும் சுற்றிக் கொள்ளவும். அனுபவம்: (அதிகம் சுற்றினாலோ, வேறு பிளேடு உபயோகித்தாலோ, வெண்ணை தனியாக வந்துவிடும்)