Friday, 11 February 2011

உலகிலேயே நடந்த சாதுவான கொள்ளை

கடை ஒன்றிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் ஒருவரின் மன நிலை எப்படி இருக்கும் ?
நெஞ்சம் படபடக்க எப்போது போலீஸ் வருமோ எனத் தெரியாமல், கேமராக்கள் தன்னை படம்பிடிக்குமே என்ற அச்சம் எல்லாம் இருக்கும். ஆனால் இங்கே நீங்கள் பார்க்கும் இந்த மனிதர் ஒரு கடையில் கொள்ளையடித்துள்ளார் ஆனால் மிகவும் சாத்வீகமாக. அவர் கைகளில் துப்பாக்கி இருக்கிறது. ஆனால் மிகவும் மரியாதையாக கல்லாப் பெட்டியில் உள்ள அனைத்து காசையும் வெளியே எடுத்துத் தரும் படி கூறுகிறார். ஆனால் கடைக்காருக்கு தெரியாது அவர் கைகளில் துப்பாக்கி இருப்பது. கடைக்காரர் இந்த முதியவர் ஏதோ விளையாடுவதாக நினைத்து நான் ஏன் காசை எடுத்து தரவேண்டும் எனக் கேட்கிறார்.

கொள்ளையடிக்கும் முதியவரோ " நான் உங்கள் கடையை கொள்ளையடிக்கிறேன்" என்று மிகத் தெளிவாகச் சொல்கிறார். பின்னரே அவர் கைகளில் உள்ள துபாக்கியைப் பார்க்கிறார் கடைக்காரர். காசைக் கொடுக்கும் முன்னர் 40.00 டால்களைத் தந்தால் நீங்கள் திருப்த்தியடைவீர்களா எனக் கேட்க, கொள்ளைக்காரரோ இல்லை, எனக்கு வீடு உள்ளது அதற்கான மாதாந்தக் கட்டணங்களை நான் கட்டவேண்டும் அல்லவா எனக் கூறுவது வேடிக்கையான விடையம். அதைவிட கொள்ளையில் ஈடுபட்டவருக்கும் வயது 65, என்றும் அவர் பல கொள்ளைகளில் ஏற்கனவே ஈடுபட்டவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். உலகில் நடைபெற்ற நிசப்தமான மற்றும் சாதுவான கொள்ளை இதுவாகத்தான் இருக்கமுடியும்.